ஓடிடியில் வெளியான ஹாலிவுட் ஹாரர் திரில்லர் ’குட் பாய்’

இந்த படத்தை பென் லியோன்பெர்க் இயக்கியுள்ளார்
சென்னை,
ஹாலிவுட் ஹாரர் திரில்லர் படமான ’குட் பாய்’ இந்த ஆண்டின் அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த படத்தின் கதை முற்றிலும் ஒரு நாயின் பார்வையில் இருந்து சொல்லப்படுவது
இந்த படத்தை பென் லியோன்பெர்க் இயக்கியுள்ளார், மேலும் இதில் அவரது சொந்த நாய் இண்டி நடித்திருக்கிறது. குட் பாய் படம் இப்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஆனால், இந்த திகில் படத்தைப் பார்க்க, நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
இந்தப் படத்தின் மூலம் லியோன்பெர்க் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். மனிதர்களுக்கு முன்பே நாய்கள் பேய்களின் இருப்பை உணர்கின்றன என்பதை இயக்குனர் இப்படத்தில் காட்டி இருக்கிறார். 'குட் பாய்' விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story






