ஓடிடியில் வெளியாகும் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான 'ஹோம்பவுண்ட்’... எப்போது, எதில் பார்க்கலாம்?


Janhvi Kapoor s Homebound ott relese date announced
x
தினத்தந்தி 16 Nov 2025 7:45 PM IST (Updated: 16 Nov 2025 7:46 PM IST)
t-max-icont-min-icon

இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை,

அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து ''ஹோம்பவுண்ட்'' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

நீரஜ் கய்வான் இயக்கிய இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 26 அன்று திரையரங்குகளில் வெளியானது. அதில் கலவையான விமர்சனக்களையே இப்படம் பெற்றது.

திரையரங்குகளில் வெளியாகும் முன், இது கேள்ஸ் திரைப்பட விழா மற்றும் பொராண்டோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

இப்போது இந்த படம் ஓடிடிக்கு வர தயாராக உள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 21 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் கவனம் பெறாத இந்த படம் ஓடிடியில் கவனம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

1 More update

Next Story