ஓடிடியில் 200 மில்லியன் பார்வைகளை நெருங்கும் லிட்டில் ஹார்ட்ஸ்


Little Hearts nears 200 million streaming minutes on OTT
x

கடந்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் உலகளவில் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்தது.

சென்னை,

சாய் மார்த்தாண்ட் இயக்கிய லிட்டில் ஹார்ட்ஸ் திரைப்படம் ஓடிடியில் 200 மில்லியன் பார்வைகளை நெருங்கி வருகிறது.

ஒரு காதல் படமாகத் திரைக்கு வந்த ''லிட்டில் ஹார்ட்ஸ்'', பார்வையாளர்களை ஈர்த்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றது. வெறும் 2.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் மவுலி தனுஜ் பிரசாந்த் மற்றும் ஷிவானி நகரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சாய் மார்த்தாண்ட் இயக்கியுள்ளார்.

கடந்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் உலகளவில் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் தற்போது இடிவி வின் (ETV Win)ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இப்படத்தில் ஜெய் கிருஷ்ணா, நிகில் அப்பூரி, ராஜீவ் கனகலா, எஸ்எஸ் காஞ்சி, அனிதா சவுத்ரி மற்றும் சத்ய கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிஞ்சித் யர்ரமில்லி இசையமைத்துள்ள இப்படத்தை ஆதித்யா ஹாசன் தயாரித்துள்ளார்.

1 More update

Next Story