46 விருதுகளை வென்ற படம்...இப்போது ஓடிடியில்....எதில் பார்க்கலாம்?

இப்படம் கபடி வீரரான நாகுலய்யாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது.
சென்னை,
விக்ராந்த் ருத்ரா இயக்கி, ஸ்ரீனி குப்பாலா தயாரித்த படம் அர்ஜுன் சக்ரவர்த்தி. கடந்த ஆகஸ்ட் மாதம், திரையரங்கில் வெளியான இப்படம் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய தெலுங்கானாவின் நல்கொண்டாவைச் சேர்ந்த கபடி வீரரான நாகுலய்யாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது.
இந்தப் படம் ஏற்கனவே 46 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. திரையரங்கில் இது மிதமான வரவேற்பைப் பெற்றநிலையில், தற்போது ஓடிடியில் எவ்வாறு வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
இப்படத்தில் சிஜா ரோஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அஜய், அஜய் கோஷ், தயானந்த் ரெட்டி மற்றும் துர்கேஷ் லங்காலபள்ளி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விக்னேஷ் பாஸ்கரன் இசையமைத்துள்ளார்.
Related Tags :
Next Story






