ஓடிடியில் இருந்து அகற்றப்படும் காஜல் அகர்வாலின் தேசிய விருது வென்ற படம்?

’அனுமான்’ படத்தை இயக்கி இருந்த பிரசாந்த் வர்மா இப்படத்தை இயக்கினார்.
சென்னை,
காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற ’ஆவ்’ படம் விரைவில் நெட்பிளிக்ஸில் இருந்து அகற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ’ஆவ்’. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் தொழில்நுட்பப் பிரிவுகளில் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.
சமீபத்தில் வெளியான ’அனுமான்’ படத்தை இயக்கி இருந்த பிரசாந்த் வர்மா இப்படத்தை இயக்கினார். இது அவர் இயக்கிய முதல் படமாகும்.
தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இந்தப் படம், காதலர் தினத்தன்று பிப்ரவரி 14, 2026 தளத்தில் இருந்து அகற்றப்பட உள்ளதுபோல் தெரிகிறது. இந்த தளம் அதன் ஸ்ட்ரீமிங் உரிமைகளைப் புதுப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இப்படத்தில் நித்யா மேனன், ரெஜினா கசாண்ட்ரா, ஈஷா ரெப்பா, பிரியதர்ஷி புலிகொண்டா மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மார்க் கே ராபின் இசையமைத்தார்.






