ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ரகு தாத்தா' திரைப்படம்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ரகு தாத்தா' திரைப்படம்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த 'ரகு தாத்தா' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கிய இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில், இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படம் வருகிற 13-ந் தேதி ஜி5 தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி5 தமிழ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com