'ஸ்குவிட் கேம் சீசன் 3' தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


ஸ்குவிட் கேம் சீசன் 3 தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Jan 2025 8:49 PM IST (Updated: 5 May 2025 3:09 PM IST)
t-max-icont-min-icon

உலகம் முழுவதும் ஹிட் அடித்த 'ஸ்குயிட் கேம்' தொடரின் 3-வது சீசனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி, இந்தத் தொடரின் 2-வது பாகம் கடந்த மாதம் 26-ம் தேதி வெளியானது. இந்நிலையில், இந்த தொடரின் 3-வது சீசன் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த தொடரின் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story