ஓ.டி.டி.யில் வெளியாகும் 'தலைவெட்டியான் பாளையம்' வெப் தொடர்

'தலைவெட்டியான் பாளையம்' வெப் தொடர் வரும் 20ம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'தலைவெட்டியான் பாளையம்' வெப் தொடர்
Published on

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பஞ்சாயத்' வெப் தொடரின் தமிழ் ரீமேக்கான 'தலைவெட்டியான் பாளையம்' செப்டம்பர் 20-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கியுள்ள இந்தத் தொடரை தி வைரல் பீவர் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனது சொந்த ஊரிலிருந்து வந்து தலைவெட்டியான் பாளையம் என்ற கிராமத்தில் பணிக்கு சேர்கிறார் அபிஷேக் குமார். அந்த ஊர் கிராமவாசிகளுக்கும், அபிஷேக் குமாருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக காட்சிப்படுத்துகிறது இந்தத் தொடர். ரீமேக் ஆகியுள்ள இந்த சீரிஸை ஆனந்தபுரத்து வீடு புகழ் நாகா இயக்கியுள்ளார்.

தொடரின் புதிய போஸ்டரில், கதாநாயகன் அபிஷேக் குமார், சாமான்களைக் குவித்துக்கொண்டு ஆட்டோவில் இருந்து இறங்கி, ஒரு தரிசு கிராமத்திற்கு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற முக்கிய நடிகர்களான சேத்தன், தேவதர்ஷினி சேத்தன் ஆகியோரும் போஸ்டரில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com