ஓடிடியில் வெளியாகும் "தண்டகாரண்யம்" திரைப்படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் நடித்த ‘தண்டகாரண்யம்’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் "தண்டகாரண்யம்" திரைப்படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கத்தில் கடந்த மாதம் தண்டகாரண்யம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அட்டகத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம், வருகிற 20-ந் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com