வெற்றிமாறனின் ''பேட் கேர்ள்'' பட ஓடிடி ரிலீஸ்.. எதில், எப்போது பார்க்கலாம்?

பேட் கேர்ள் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
வெற்றிமாறனின் ''பேட் கேர்ள்'' பட ஓடிடி ரிலீஸ்.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பேட் கேர்ள்'.

இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பேட் கேர்ள் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஞ்சலி சிவராமனின் நடிப்பு பாராட்டப்பட்டது. இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி பேசுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com