நாமக்கல்லில்விதிமுறைகளை மீறிய 10 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல்
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது தகுதிசான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட ஒரு பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த சோதனையின் போது, வாடகைக்கு இயக்கப்பட்ட சொந்த உபயோக வாகனங்கள் 2, உரிய ஆவணம் இல்லாமல் இயக்கப்பட்ட 3 லாரிகள், 4 சரக்கு வாகனங்கள் என மொத்தம் 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களுக்கு அபராதமாக ரூ.1 லட்சம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story