சூதாட்டம், மதுவிற்றதாக 42 பேர் கைது


சூதாட்டம், மதுவிற்றதாக 42 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:48 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் சூதாட்டம், மதுவிற்றதாக 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

மதுவிற்பனை

மிலாடிநபியையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் போலீசாருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி மதுவிலக்கு போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் ஆங்காங்கே சோதனைகள் நடத்தி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அந்த வகையில் பெட்டிக்கடைகள் மற்றும் சந்து பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 252 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மதுபாட்டில்களை கடத்த பயன்படுத்தப்பட்ட மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

இதேபோல் பள்ளிபாளையம் அடுத்த வெப்படை பழைய வளவு பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, ஏட்டுகள், போலீசார் குழுவாக சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் பிடித்து வெப்படை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளிபாளையம், வெப்படை, சங்ககிரி, திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ரவி (வயது 50), சோமசுந்தரம் (41), சக்திவேல் (37), தேவராஜ் (53), அஜித் (25), மூர்த்தி (33), சபரி ஈஸ்வரன் (36), சண்முகம் (37), முருகேசன் (30), குணசீலன் (30), தங்கராசு (30), கனகராஜ் (32), ராஜேந்திரன் (29), வெங்கடேசன் (25), ரமேஷ் (42), பங்காரு (49) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.36 ஆயிரம் மற்றும் 2 சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.


Next Story