வைத்தீஸ்வரன்கோவில் மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


வைத்தீஸ்வரன்கோவில் மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x

அம்மன் வீதி உலா நடைபெற்ற போது பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு மாவினால் கோலமிட்டு, மாவிளக்கு, அர்ச்சனைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதசுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கீழத்தெருவில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலின் சித்திரை திருவிழா காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வைத்தீஸ்வரன் கோவில் வர்த்தக சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதனை ஒட்டி அம்மனுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், மேள தாளம் முழங்கிட அம்மன் வீதி உலா காட்சி நடந்தது.

வீதி உலாவின்போது பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு மாவினால் கோலமிட்டு, மாவிளக்கு, அர்ச்சனைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

இதில் வர்த்தக சங்கத் தலைவர் கண்ணன், கௌரவத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மதியழகன், பொருளாளர் ராமதாஸ், இணைப் பொருளாளர் சத்தியசீலன், நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் முருகேசன் நாடார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story