கும்பாபிஷேக விழா.. பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்


கும்பாபிஷேக விழா.. பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்
x

சாணார்பட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் காளியம்மன், கன்னிமூல கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி ராமேஸ்வரம், திருச்செந்தூர், அழகர் கோயில், திருமலைக்கேணி, கொடுமுடி உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டு வரப்பட்டன. இதேபோல் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டன.

தொடர்ந்து மேட்டுக்கடை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் வேள்வி பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story