திருச்சானூர் கோவிலில் செப்டம்பர் 2-ம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு செப்டம்டபர் 2-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
திருப்பதி:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் சாஸ்திர முறைபடி நடக்கிறது. அதையொட்டி வருகிற 2-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் அன்று கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. வருகிற 4-ந்தேதி மாலை பவித்ரோற்சவத்துக்கான அங்குரார்ப்பணம் நடக்கிறது. இதையடுத்து 5-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 6-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 7-ந்தேதி மகாபூர்ணாஹுதி நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






