காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

முப்பிடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (3-ம் தேதி) சிறப்பு பூஜைகள் தொடங்கின. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மாலையில் புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று (4-ம் தேதி) காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும் மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பிம்ப சுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம் நடந்தது. தொடர்ந்து 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் நாடி சந்தானம், ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி, வஸ்த்ராகுதி, மகா பூர்ணாகுதி, யாத்ராதானம் போன்றவை நடந்தது. தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்ப நீர் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு விமான கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன், பார்வதி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்தி விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் முப்பிடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு அம்மன் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

1 More update

Next Story