குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
x

வருஷாபிஷேத்தை முன்னிட்டு முத்துமாலை அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திரமான வைகாசி மாத புனர்பூசம் நட்சத்திர தினத்தில் ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வருஷாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், கும்ப பூஜைகள், யாகசாலை பூஜைகள், கோமாதா பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதன்பின் விநாயகர், முத்துமாலை அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாலை அம்மனை வழிபட்டனர்.

1 More update

Next Story