குத்தாலம்: மகா காளியம்மன் கோவில் திருவிழா


குத்தாலம்: மகா காளியம்மன் கோவில் திருவிழா
x

பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி வடக்கு தெருவில் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 11-ம் ஆண்டு பால்குட அபிஷேகம், காவடி திருவிழா கடந்த 22ஆம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விநாயகர் அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான காவடி, கரகம் மற்றும் பால்குட அபிஷேகம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக கங்கணம் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அசிக்காடு மணிக்குளக் கரையிலிருந்து சக்தி கரகம் முன் செல்ல பால் குடங்கள், காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கைகள், மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி மற்றும் நாளை மஞ்சள் நீர் விளையாட்டுடன் விழா நிறைவுறுகிறது.

1 More update

Next Story