உலக நன்மைக்காக மகா சுதர்சன ஹோமம்


உலக நன்மைக்காக மகா சுதர்சன ஹோமம்
x
தினத்தந்தி 4 July 2025 1:41 PM IST (Updated: 4 July 2025 1:54 PM IST)
t-max-icont-min-icon

சக்கரத்தாழ்வார் பிறந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு இந்த சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

மதுரை

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர். இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு காளமேகப் பெருமாள் கோவில் உள்ளது. இது 108 வைணவ தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில், உலக மக்களின் நன்மைக்காக இன்று மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

சக்கரத்தாழ்வார் பிறந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு இந்த சிறப்பு ஹோமம் நடைபெற்றது. காலையில் விஸ்வரூபம், சங்கல்பம், அதனைத் தொடர்ந்து மகா ஹோமம் வளர்க்கப்பட்டது. பின்னர் பூர்ணாஹுதி செய்யப்பட்டு அலங்கார திருமஞ்சனம், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

சுதர்சன யாகத்தில் ஒத்தக்கடை, மேலூர், மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story