திருப்போரூர் முருகன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்

கன்னகப்பட்டு வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடபிறப்புக்கு முந்தையநாளில் திருப்போரூர் முருகன் திருப்படி திருச்சபை சார்பில் 1,008 பக்தர்கள் பங்கேற்கும் பால்குட விழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் பால்குட விழா நேற்று காலை நடைபெற்றது. இதற்காக பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள், சென்னையில் இருந்து பாதயாத்திரையாக திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றனர்.
நேற்று காலை கன்னகப்பட்டு வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் பூஜைகள் நடைபெற்றன. ஆன்மிக இன்னிசை கச்சேரிகளும் நடைபெற்றன.
Related Tags :
Next Story