நாகை சட்டநாதர் கோவில் குடமுழுக்கு


நாகை சட்டநாதர் கோவில் குடமுழுக்கு
x

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகையில் பிரசித்தி பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 2- ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. யாகசாலை பூஜைகள் இன்று காலையில் நிறைவடைந்ததும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோவில் ராஜகோபுரம், மூலவர் கோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமரேசன், துணை ஆணையர் ராணி, உதவி ஆணையர் ராஜா இளம்பெரும்வழுதி, செயல் அலுவலர் அசோக் ராஜா, கணக்கர் குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story