செய்யூர் தீப்பாஞ்சம்மன் கோவிலில் பால்குட உற்சவ விழா

செய்யூர் தீப்பாஞ்சம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் தீப்பாஞ்சம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் மூன்றாம் ஆண்டு பால்குட உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி செய்யூர் கரியமாணிக்க பெருமாள் திருக்கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது. செய்யூர் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால்குடங்களை சுமந்து வந்தனர். இந்த ஊர்வலம் தீப்பாஞ்சம்மன் கோவிலை அடைந்ததும், பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மூலவர் தீப்பாஞ்சம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இரவு தீப்பாஞ்சம்மன் மின்விளக்கு புஷ்ப அலங்காரத்துடன் திருவிதி உலா நடைபெற்றது.






