திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை
x

மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு கருடசேவை எனப்படும் தங்கக் கருட வாகன வீதிஉலா நடப்பது வழக்கம். அதன்படி சித்ரா பவுர்ணமியான நேற்று கோவிலில் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை எனப்படும் தங்கக் கருட வாகன வீதிஉலா நடந்தது.

உற்சவர் மலையப்பசாமி பலவண்ணமலர்கள், தங்க, வைர ஆபரணங்கள் அலங்காரத்தில் தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story