செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி


செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி
x

செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தென்காசி

செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவிலில் கொடைவிழா நிறைவடைந்த நிலையில், நேற்று 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் ஹோமங்கள் வேள்விகள் நிகழ்ந்த நிலையில், நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு அம்பாளுக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதில் செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story