கபிஸ்தலம் முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா


கபிஸ்தலம் முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
x

தீமிதி திருவிழாவை தொடர்ந்து அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் தெற்கு செங்குந்தர் தெருவில் அமைந்திருக்கும் முத்து மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சத்திரம் காவிரி படித்துறையில் இருந்து பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வந்த பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக கோவில் அருகே உள்ள திடலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலாவின் நிறைவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

1 More update

Next Story