ஊத்துக்கோட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா


ஊத்துக்கோட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா
x

காப்பு கட்டி விரதம் இருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணி கிராமத்தில் புகழ்பெற்ற தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 13-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அம்மனுக்கு அபிஷேகம், காப்பு அணிவித்தல், பகாசூரன் சம்ஹாரம், திரௌபதி அம்மனுக்கும் அர்ஜுனனுக்கும் திருக்கல்யாணம், நச்சுக்ளியாகம், சக்கராபுரி கோட்டை என்று சொல்லக்கூடிய சிறப்பு நிகழ்ச்சி, தெருக்கூத்து நாடகம், தர்மராஜா வீதி உலா, வான வேடிக்கை, அர்ஜுனன் தபசு, மாடுபிடி நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அருகே உள்ள குளத்தில் புனித நீராடி, பின்னர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சென்னங்காரணி, மதுரா மேட்டு கண்டிகை, பள்ளகண்டிகை, பாலவாக்கம், லட்சிவாக்கம், பெரம்பூர், பனப்பாக்கம், தாராட்சி, ஊத்துக்கோட்டை பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story