வந்தவாசி: பொன்னூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


வந்தவாசி: பொன்னூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x

கும்பாபிஷேக விழாவில் பொன்னூர், வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், சனிக்கிழமை கும்ப அலங்காரம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை தத்வார்ச்சனை, யாத்ராதானம், மகா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மூலவர் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பொன்னூர், வந்தவாசி, இளங்காடு, நல்லேரி, வங்காரம், ஆராசூர் போன்ற கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story