சார்ஜா சர்வதேச விமான நிலையத்துக்கு 40 லட்சம் பயணிகள் வருகை


சார்ஜா சர்வதேச விமான நிலையத்துக்கு 40 லட்சம் பயணிகள் வருகை
x

சார்ஜா சர்வதேச விமான நிலையத்துக்கு 40 லட்சம் பயணிகள் வந்துள்ளனர்.

சார்ஜா

சார்ஜா விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாய், அபுதாபி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் விமான நிலையம், சார்ஜா சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்துக்கு இந்தியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் வந்த பயணிகளின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்துக்கும் அதிகமாகும். இது கடந்த 2022-ம் ஆண்டை விட 12 சதவீதம் அதிகம். மேலும் இதே காலகட்டத்தில் மட்டும் 35 ஆயிரம் டன் பொருட்கள் கையாளப்பட்டுள்ளது.

தொடர்ந்து சார்ஜா விமான நிலையத்தில் பயணிகளின் வசதிகளை அதிகப்படுத்தும் வகையில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அமீரகத்தின் மிகவும் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக சார்ஜா விமான நிலையம் திகழ்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


Next Story