அபுதாபியில், அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து


அபுதாபியில், அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
x
தினத்தந்தி 24 Oct 2023 7:00 PM GMT (Updated: 24 Oct 2023 7:01 PM GMT)

அபுதாபியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அபுதாபி,

அபுதாபி போலீஸ் மற்றும் தீயணைப்பு ஆணையம் சேர்ந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி தீவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினருடன் சென்றனர்.

பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றினர். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை மீட்பு குழுவினர் விரைவாக அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story