சார்ஜா அமெரிக்க பல்கலைக்கழக புதிய நிர்வாக குழுவினர் ஆட்சியாளருடன் சந்திப்பு


சார்ஜா அமெரிக்க பல்கலைக்கழக புதிய நிர்வாக குழுவினர் ஆட்சியாளருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 26 Oct 2023 8:30 PM GMT (Updated: 26 Oct 2023 8:30 PM GMT)

சார்ஜா அமெரிக்க பல்கலைக்கழக புதிய நிர்வாக குழுவினர் ஆட்சியாளருடன் சந்தித்தனர்.

சார்ஜா,

சார்ஜாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சார்ஜா அமெரிக்க பல்கலைக்கழகம் மிகவும் முக்கியமானது. இந்த பல்கலைக்கழகத்துக்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை சமீபத்தில் நியமனம் செய்து சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி உத்தரவிட்டார். அதனையடுத்து புதிய நிர்வாக குழுவினர் ஆட்சியாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

சார்ஜா அமெரிக்க பல்கலைக்கழகம் இந்த பகுதியில் உயர் கல்விக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த பலகலைக்கழகத்தின் மேம்பாட்டுக்கும், புதிய சாதனைகளுக்கும் புதிய குழுவினர் சிறப்பான பங்கினை வழங்க வேண்டும். இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது முதல் அதன் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மேலும் இங்கு மாணவர்களுக்கான சூழ்நிலை நட்புடன் அமைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலை காரணமாக எனது இதயத்தில் இந்த பல்கலைக்கழகத்துக்கு முக்கியமான இடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பலகலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய திட்டங்கள் குறித்து புதிய நிர்வாக குழுவினர் சார்ஜா ஆட்சியாளரிடம் விவரித்தனர்.


Next Story