துபாயில் அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கல்: 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் திர்ஹாம் பணம்; சவுதியில் பணிபுரியும் தமிழர் தேர்வு


துபாயில் அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கல்: 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் திர்ஹாம் பணம்; சவுதியில் பணிபுரியும் தமிழர் தேர்வு
x
தினத்தந்தி 22 Oct 2023 12:30 AM IST (Updated: 22 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழர் தேர்வு செய்யப்பட்டார்

துபாய்,

துபாயில் பிரபல தனியார் நிறுவனம் ஒவ்வொறு மாதமும் அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கல் மூலம் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தின் ஆம்பூரை சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன். இவர் சவுதி அரேபியாவில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சவுதி அரேபியாவிற்கு துபாய் வழியாக விமான பயணம் செய்யும் போது, மகேஷ் குமார் துபாய் நிறுவனத்தில் அதிர்ஷ்ட குலுக்கலுக்கான லாட்டரி டிக்கெட்டை வாங்கினார்.

இவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு மாதந்தோறும் 25 ஆயிரம் திர்ஹாம் என 25 ஆண்டுகளுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டார். இந்த பரிசை அமீரகத்தில் வசிக்காத ஒருவர் பெறுவது முதல் முறை.

இது குறித்து மகேஷ் குமார் நடராஜன் கூறும்போது, எனது வாழ்க்கையில் படிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். தற்போது கிடைத்த பரிசு தொகையை எனது மகள்களின் எதிர்கால கல்விக்காக செலவிடுவேன் என்றார்.

1 More update

Next Story