மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் ஜூவல்லரியில் சிறப்பு சலுகை விற்பனை


மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் ஜூவல்லரியில் சிறப்பு சலுகை விற்பனை
x
தினத்தந்தி 25 Oct 2023 8:30 PM GMT (Updated: 25 Oct 2023 8:30 PM GMT)

மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் ஜூவல்லரியில் பண்டிகை கால சிறப்பு சலுகை விற்பனை தொடங்கியுள்ளது.

துபாய்

துபாயில் மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் ஜூவல்லரி நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளின் மேலாண்மை இயக்குனர் ஷாம்லால் அகமது கூறியதாவது:-

மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் ஜூவல்லரி கிளைகளில் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் உறுதியாக தங்க நாணயத்தை பெறலாம்.

5 ஆயிரம் திர்ஹாம் மதிப்புள்ள வைரம் மற்றும் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். அதேபோல் 3 ஆயிரம் திர்ஹாம் மதிப்புள்ள வைரம் மற்றும் ரத்தின கற்களுடன் கூடிய நகைகளுக்கு ½ கிராம் தங்க நாணயம் இலவசமாக பெறலாம். பண்டிகை கால விற்பனையில் மைன், எரா, பிரீசியா, விராஸ், எத்தினிக்ஸ் மற்றும் டிவைன் ஆகிய துணை பிராண்டு நகைகளும் கிடைக்கிறது. சமகாலத்திற்கு ஏற்ற நேர்த்தியான வடிவமைப்பில் நகைகள் 18 காரட் மதிப்பிலும் உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய 916 தங்க நகைகளை எந்தவிதமான நஷ்டமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.

அதேபோல் கிளைகளில் ஸ்பெஷல் பை கவுண்ட்டர்களும் நிறுவப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஏற்ற, இறக்கத்துடன் கூடிய தங்க விலையை வாடிக்கையாளர்கள் பாதுகாத்துக்கொள்ள 10 சதவீதம் முன்பணம் செலுத்தி நகைகளை முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இச்சலுகைகள் அனைத்தையும் அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு, தூர கிழக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள அனைத்து கிளைகளிலும் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி வரை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story