கர்நாடக தேர்தல்: நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா காங்கிரசில் இணைந்தார்...!


கர்நாடக தேர்தல்: நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா காங்கிரசில் இணைந்தார்...!
x

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் கட்சி தாவல்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரை நட்சத்திரங்களும் தங்களுக்கு விருப்பமான கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் கன்னட திரையுலகின் முதன்மை குடும்பமாக கருதப்படும் நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமானவர் கீதா சிவராஜ்குமார். இவர் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரசில் இணைந்துள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி பங்காருப்பாவின் மகளான கீதா கடந்த 2014 தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story