கருணாநிதி நூற்றாண்டு விழா ஓவிய போட்டி


கருணாநிதி நூற்றாண்டு விழா ஓவிய போட்டி
x
தினத்தந்தி 1 July 2023 1:59 AM IST (Updated: 1 July 2023 12:53 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கருணாநிதி நூற்றாண்டு விழா ஓவிய போட்டி நடந்தது .

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி ஓவியப்போட்டியை தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கருணாநிதி உருவம் தாங்கிய வண்ணப்படம் மற்றும் சாதனைகள் அடங்கிய ஓவியங்களை வரைந்தனர். தொடர்ந்து ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கவிஞர்கள் பாப்பாக்குடி செல்வமணி, மூர்த்தி, ஓவிய ஆசிரியர் வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story