புதிய வண்ணங்களில் மோட்டோ ஜி 32


புதிய வண்ணங்களில் மோட்டோ ஜி 32
x

மோட்டோரோலா நிறுவனத் தயாரிப்புகளில் ஜி 32 மாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாடலில் தற்போது ரோஸ் கோல்டு மற்றும் சாட்டின் மெரூன் ஆகிய நிறங்களில் ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளது. 6.5 அங்குல எல்.சி.டி. திரையைக் கொண்ட இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் அட்ரினோ 610 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ள இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் இதில் உள்ளது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 30 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.11,999.


Next Story