மிளகாய் சாகுபடி 20 சதவீதம் குறைய வாய்ப்பு

மிளகாய் சாகுபடி கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
மிளகாய் சாகுபடி 20 சதவீதம் குறைய வாய்ப்புநாட்டிலேயே சிவப்பு மிளகாய் சாகுபடியில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இந்தநிலையில் அந்த மாநில விவசாயிகள் இந்த காரீப் பருவத்தில் (ஜூன்-அக்டோபர்) மிளகாய் சாகுபடியை குறைத்து கொண்டனர்.
இதனால் மிளகாய் சாகுபடி கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மிளகாயை காட்டிலும் சோளம், பச்சை பயிறு, புகையிலை போன்ற பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாலும், அதிகளவிலான கையிருப்பு, விலை வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகம் போன்ற காரணத்தால் விவசாயிகள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story






