தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (17.12.2025 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் உள்பட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 68 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 791 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 195 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 845 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
179 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 208 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 204 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 481 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
83 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 664 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 123 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 895 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.






