இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Dec 2025 10:59 AM IST
8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 17 Dec 2025 10:57 AM IST
ஈரோட்டில் தவெக பிரசாரம் நடைபெறவுள்ள இடத்தில் எஸ்.பி. ஆய்வு
விஜய் பிரசார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 17 Dec 2025 10:56 AM IST
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.
- 17 Dec 2025 10:52 AM IST
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இஸ்ரேல் பயணம்; நெதன்யாகுவுடன் சந்திப்பு
2 நாட்கள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இஸ்ரேல் சென்றுள்ளார்.
- 17 Dec 2025 10:50 AM IST
பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்
மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு, உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- 17 Dec 2025 10:24 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) வேலூர் தங்கக்கோவிலுக்கு வருகை தர உள்ளார். அவர் காலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு 11 மணி அளவில் வேலூர் தங்கக்கோவிலுக்கு வருகிறார்.
- 17 Dec 2025 10:17 AM IST
கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோவை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17 Dec 2025 10:04 AM IST
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- 17 Dec 2025 9:49 AM IST
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதைக்கான சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
- 17 Dec 2025 9:48 AM IST
தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்
ஈரோட்டிற்கு வந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு யார் முதலில் மாலை போடுவது என்பதில் தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை போட வந்த நிர்வாகியை மற்றொரு நிர்வாகி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்.ஆனந்த் உடனே இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
















