புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தில் முடிவடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இம்மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தது. அதன்பின்னர், இந்திய பங்குச்சந்தை உயரத்தொடங்கியது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, நிப்டி 148.10 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 939.05 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. அதேபோல், 312.60 புள்ளிகள் உயர்ந்து பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 105.80 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டு முடிவடைந்தது.
சென்செக்ஸ் 384.30 புள்ளிகள் உயர்ந்து 84 ஆயிரத்து 928.61 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டு நிறைவடைந்தது. அதேபோல், 163.90 புள்ளிகள் உயர்ந்து பின் நிப்டி 24 ஆயிரத்து 953.10 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. அதேவேளை, 394.29 புள்ளிகள் வரை உயர்ந்து பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 349.41 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.