சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்


சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

சர்வதேச சூழ்நிலை, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட பல்வேறு காரணிகள் இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதன்படி, 2 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 334 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 304 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 87 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

80 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 113 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 46 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 242 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

119 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 75 புள்ளிகள் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 359 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 622 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மராட்டிய தினத்தையொட்டி இந்திய பங்குச்சந்தைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story