சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் இன்று ( திங்கட்கிழமை- 30.06.2025) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 148 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 489 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 191 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 253 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

202 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 144 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 527 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 529 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

405 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 138 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 97 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 437 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருந்த கூடுதல் வரி விதிப்புக்கான கால அவகாசம் 9ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூடுதல் வரிவிதிப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ள நிலையில் அது சர்வதேச பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்ததால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

1 More update

Next Story