நடப்பு நிதி ஆண்டில் இருசக்கர வாகனங்கள் விற்பனை உயர வாய்ப்பு

ஹீரோ நிறுவனம் 5 லட்சத்து 54 ஆயிரம் வாகனங்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையை மையமாக கொண்டு செயல்படும் பிரபல மதிப்பீடு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. இந்த நிதியாண்டில் (2025-26) இருசக்கர வாகனங்கள் விற்பனை 6 முதல் 9 சதவீதம்வரை உயரும் என தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி கடந்த ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டு கணக்கீட்டை காட்டிலும் 9 சதவீதம் அதிகரித்து 15 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ஹீரோ நிறுவனம் 5 லட்சத்து 54 ஆயிரம் வாகனங்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி சீர்திருத்த அறிவிப்பு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேவை, பண்டிகை காலம் ஆகிய காரணங்களால் வரும் நாட்களில் இருசக்கர வாகனங்கள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






