2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு


2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
x

2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. நாளை (அக்.17) முதல் வரும் நவம்பர் 10-ம் தேதி வரை ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசாணை நிலை எண்.230 மற்றும் 231 உயர் கல்வித்(F2)துறை. நாள்.06.10.2025. இன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 14.03.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 02/2024 ரத்து செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய (Website:https://www.trb.tn.gov.in) இணையதளம் கல்லூரிகளுக்கான 2,708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை எண்.04/2025 இன்று (16.10.2025) வெளியிடப்படுகிறது.

பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நாளை (17.10.2025) முதல் (10.11.2025) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்:12/2019, நாள் 28.08.2019 & 04.10.2019 மற்றும் அறிவிக்கை எண்: 02 / 2024, நாள்:14.03.2024-இன்படி, விண்ணப்பித்த பணிநாடுநர்கள் இப்புதிய அறிவிக்கையின்கீழ் மீண்டும் வேண்டும். இவர்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் மற்றும் வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story