அண்ணா பல்கலை. நடத்தும் டான்செட் தேர்வு: எந்தெந்த படிப்புகளுக்கு அவசியம்?

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெளியிடப்படும்
சென்னை,
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்த பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எம். பி. ஏ ,,எம் சி ஏ, எம். இ ,எம் டெக் ( M.Tech) , மற்றும் எம் .பிளான் (M.Plan) போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த நுழைவு தேர்வு,தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (டான்செட்-2025) மற்றும் காமன் இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் டெஸ்ட் அண்ட் அட்மிஷன்ஸ் (சீட்டா) (CEETA-PG) ) என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெளியிடப்படும்.இந்தப் படிப்புகளில் 2025-2026 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி-
A.1. MASTER OF BUSINESS ADMINISTRATION (M.B.A.)
2. MASTER OF COMPUTER APPLICATIONS (M.C.A.)
B. 1.MASTER OF ENGINEERING (M.E.) / MASTER OF TECHNOLOGY (M.TECH.) /
2.MASTER OF ARCHITECTURE (M.ARCH.) / MASTER OF PLANNING (M.PLAN.)
- ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
A. தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (டான்செட்-2025)
இந்த நுழைவுத் தேர்வு எம் .பி .ஏ ( M.B.A )மற்றும் எம். சி. ஏ ( M C.A )ஆகிய படிப்புகளில் மாணவ மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக நடத்தப்படும் தேர்வு ஆகும்.குறிப்பாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ள துறைகள் ரீஜனல் கேம்பஸ் (REGIONAL CAMPUS) மற்றும் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் சேரவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேரவும், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேரவும் இந்த நுழைவு தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும்.
மேலும், சுயநிதி கல்லூரிகளில் ( பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தனித்து இயங்கும் கல்லூரிகள் (STAND-ALONE COLLEGES) ) சேரவும் இந்த நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.எம்.பி.ஏ படிப்பில் சேர பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டம் ( பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினத்தவர் (அருந்ததியினர்) 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்
எம்.சி.ஏ (M.C.A) படிப்பில் சேர பி. சி. ஏ (B.C.A) படிப்பில் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி B.Sc (INFORMATION TECHNOLOGY)மற்றும் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ( B.Sc. COMPUTER SCIENCE) அல்லது அதற்கு சமமான படிப்பில் வெற்றி பெற்றவர்களும் எம் .சி .ஏ படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இவை தவிர பிளஸ் டூ தேர்வில் கணித பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து வெற்றி பெற்றவர்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டியது அதை அவசியமாகும். இருப்பினும், பிற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்த ப்பட்ட முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர் மற்றும் பழங்குடி இன மாணவ மாணவிகள் பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
B. காமன் இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் டெஸ்ட் அண்ட் அட்மிஷன்ஸ் (சீட்டா).
இந்த நுழைவுத் தேர்வு எம் இ (M.E), எம். டெக் (M .Tech) ,எம். ஆர்க் (M.Arch )ஆகிய படிப்புகளில் மாணவ மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக நடத்தப்படும் தேர்வு ஆகும்.
குறிப்பாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ள துறைகள் ரீஜனல் கேம்பஸ்( REGIONAL CAMPUS) மற்றும் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் சேரவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேரவும், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேரவும் இந்த நுழைவு தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும்.
மத்திய அரசால் நிதி உதவி பெற்று , அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் அரசு நிதி உதவி பெற்ற பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேர இந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.மேலும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்தப் படிப்புகளில் சேரவும் இந்த நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
எம்.இ (M.E ),எம்.டெக் (M.Tech),எம்.ஆர். க் (M.Arch),எம் .பிளான் (M.Plan) ஆகிய பட்ட மேற்படிப்பில் சேர விரும்புபவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
1. பி . இ ( B.E ),பி .ஆர்க் (B.Arch), பி .டெக் ( B.Tech ) ஆகிய பட்டப்படிப்பு.
2. பி .ஃபார்ம் (B.Pharm )பட்டப்படிப்பு.
3. அறிவியல் ( SCIENCE) /கலை (ARTS) பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம் மேற்படிப்பு ( MASTER DEGREE).
4. ஏ. எம். ஐ .இ (AMIE) படிப்பு.
நுழைவுத் தேர்வு
1 இந்தப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
2. டான்செட் எம்.சி.ஏ ( TANCET -M.C.A) படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 1000. பட்டியல் இனத்தவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 500.
3.டான்செட் எம். பி .ஏ ( TANCET -M.B.A) படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 1000. பட்டியல் இனத்தவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 500.
4. சீட்டா- பி ஜி ( CEETA-PG ) படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 1800. பட்டியல் இனத்தவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 900.(G.S.T கவுன்சிலிங் கட்டணத்தில் ரூபாய் 400 சேர்த்து)
5. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் 23.03.2025 ஆகும்
6. சென்னை, கோயம்புத்தூர் ,சிதம்பரம் திண்டுக்கல், ஈரோடு ,காரைக்குடி ,மதுரை ,நாகர்கோவில் ,சேலம் ,தஞ்சாவூர் ,திருநெல்வேலி ,திருச்சிராப்பள்ளி ,வேலூர் ,விழுப்புரம் , மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு
தொடர்பு முகவரி :
THE SECRETARY
TAMIL NADU COMMON ENTRANCE TEST (TANCET/CEETA-PG)
CENTRE FOR ENTRANCE EXAMINATIONS
ANNA UNIVERSITY
CHENNAI – 600 025.
PH: 044-2235 8289 / 044-2235 8314