தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மொத்தம் 1,589 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பணியிடங்களை(அப்ரண்டீஸ்) நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம், கும்பகோணம், மதுரை, நெல்லை, சேலம், சென்னை எம்.டி.சி. அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தில் இந்த பயிற்சி பணியிடங்கள் உள்ளன.
பணியிடங்கள்:
பொறியியல் பட்டதாரி பயிற்சி; 459
பட்டயப் பயிற்சி : 561
பட்டதாரி பயிற்சி : 569
என மொத்தம் 1589 பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025
கல்வி தகுதி: என்ஜினீயரிங், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதியம்: அதிகபட்சமாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும்
பயிற்சி கால அளவு: 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.






