சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 93.66 சதவீதம் தேர்ச்சி

நாடு முழுவதும் சிபிஎ ஸ் இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது
புதுடெல்லி,
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பை பொறுத்தவரையில், 23 லட்சத்து 71 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் எழுதியதில், 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.66 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.06 சதவீதம் ஆகும்.
ஒட்டுமொத்த தேர்ச்சியில் 95 சதவீதம் மாணவிகளும், 92.63 சதவீதம் மாணவிகளும், 95 சதவீதம் மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 2.37 சதவீதம் அதிகம். இதில் சென்னை மண்டலம் 98.71 சதவீதத்துடன் 4-வது இடத்தில் இருக்கிறது.தேர்ச்சி பெற்றவர்களில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 பேரும், 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 45 ஆயிரத்து 516 பேரும் ஆவார்கள்.
தேர்ச்சி சதவீதத்தில் நாட்டில் தென் மாநிலங்களில் தான் அதிக தேர்ச்சி இருக்கிறது. அதாவது, தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 95 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கள் அதைவிட குறைவாகவே தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன.
தேர்வு முடிவுகள் குறித்த ஆவணங்கள் அந்தந்த மாணவ-மாணவிகளின் டிஜி லாக்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத முடியாமல் போனவர்கள், தேர்வில் தோல்வியை தழுவியவர்களுக்கான துணைத்தேர்வு வருகிற ஜூலை மாதம் 1 அல்லது 2-வது வாரம் நடத்தப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது