கான்ஸ்டபிள் வேலை ; 7,565 காலிப்பணியிடங்கள் - எஸ்.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு

12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஸ்டாப் செலெக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி-யில் போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்; 7,565 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் எவ்வளவு; தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு; வயது வரம்பை பொறுத்தவரை 21.10.2025 தேதியின் படி 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி; ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://ssc.gov.in/ ) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2025.






