நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் நடத்தும் படிப்புகள் - சேர்வது எப்படி?


நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் நடத்தும் படிப்புகள் - சேர்வது எப்படி?
x

புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகள் உள்ளன.

"நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் " (National Institute of Science Education and Research ) (NISER) கல்வி நிறுவனம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ளது .

மேலும், மும்பை பல்கலைக் கழகத்தோடு ,(UNIVERSITY OF MUMBAI) இணைந்த 'டிபார்ட்மென்ட் ஆப் அடாமிக் எனர்ஜி சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸ்"( DEPARTMENT OF ATOMIC ENERGY CENTRE FOR EXCELLENCE IN BASIC SCIENCE ) (UM-DAE CEBS ) என்னும் அமைப்பு மத்திய அரசால் டிபார்ட்மென்ட் ஆப் அடாமிக் எனர்ஜி (DEPARTMENT OF ATOMIC ENERGY ) என்னும் துறையின் கீழ் 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த இரு அமைப்புகளின் முக்கிய நோக்கம் அறிவியல் சார்ந்த மனித வளம் மேம்பாட்டை உருவாக்கி அதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதாகும்.

இது தவிர, இந்தியாவில் உள்ள அணுசக்தி துறை மற்றும் அறிவியல் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் அறிவியல் திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்தவும் இந்த அமைப்புகள் உதவுகின்றன.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் " (NATIONAL INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH ) (NISER),புவனேஸ்வர்.

புவனேஸ்வரில் இயங்கும் இந்த அமைப்பு -5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம். எஸ் சி (5 YEAR INTEGRATED M.Sc ) படிப்பை பயாலஜிக்கல் (BIOLOGICAL ),கெமிக்கல் (CHEMICAL),மேத்தமேட்டிக்கல் (MATHEMATICAL )மற்றும் பிசிகல் சயின்ஸ் (PHYSICAL SCIENCE ) ஆகிய பிரிவுகளில் நடத்துகிறது.

இந்தப் பாடங்களோடு பயாலஜி (BIOLOGY), கெமிஸ்ட்ரி ( CHEMISTRY ) ,கம்ப்யூட்டர் சயின்ஸ் ( COMPUTER SCIENCE),மேத்தமேடிக்ஸ் (MATHEMATICS )அல்லது பிசிக்ஸ் (PHYSICS) ஆகிய விருப்ப பாடங்களும் நடத்தப்படுகிறது.

இந்தப் படிப்பை படித்தவர்களுக்கெல்லாம் "ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிடியூட்" '(HOMI BHABHA NATIONAL INSTITUTE )என்னும் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் பட்டத்தை வழங்குகிறது.

மொத்தம் இந்த படிப்பில் 200 இடங்கள் உள்ளன. இவற்றில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இனத்தவர்களுக்கு அரசு விதிப்படி இட ஒதுக்கீடு உண்டு.

டிபார்ட்மென்ட் ஆப் அடாமிக் எனர்ஜி சென்டர் பார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸ்"( DEPARTMENT OF ATOMIC ENERGY CENTRE FOR EXCELLENCE IN BASIC SCIENCE ) (UM-DAE CEBS )

இந்த அமைப்பு மும்பையில் இயங்குகிறது .தரமான ஆசிரியர்கள் உதவியோடு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான சூழல் கொண்ட சிறந்த இடமாக திகழ்கிறது. மும்பையில் உள்ள தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் துணையோடு இந்த படிப்பு நடத்தப்படுகிறது.

இங்கு 5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்பு நடத்தப்படுகிறது. குறிப்பாக பயாலஜிக்கல், கெமிக்கல், மேத்தமேட்டிக்கல் மற்றும் பிசிகல் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இந்த படிப்புகள் நடத்தப்படுகிறது.

150 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக இயங்கும் மும்பை பல்கலைக்கழகம் இங்கு படிப்பவர்களுக்கு பட்டம் வழங்குகிறது. மொத்தம் 57 மாணவ மாணவிகள் மட்டுமே இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் .

மேலும் விவரங்களுக்கு, www.cbs.ac.in என்னும் இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை, கல்வி தகுதி:

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். மேலும் ,2005 ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வை எழுதும் மாணவ மாணவிகளும் இந்த தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்

இந்தத் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே எந்த வயதிலும் இந்த தேர்வு எழுதலாம்.

இந்தப் படிப்புகளில் சேர,பிளஸ் 2 தேர்வில் கண்டிப்பாக சராசரியாக 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். இருப்பினும் ,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.

விண்ணப்ப கட்டணம்

இந்தப் படிப்பில் சேர 'நெஸ்ட் " ( NEST) எனப்படும் "நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் " ( NATIONAL ENTRANCE SCREENING TEST )என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இந்த நுழைவு தேர்வு வழக்கமாக ஜூன் மாதத்தில் நடைபெறும்

இந்த நுழைவு தேர்வுக்கு எழுத விண்ணப்ப கட்டணம் ரூபாய் 1400 ஆகும். பெண்கள் ரூபாய் 700 செலுத்தினால் போதும். இதேபோல் எஸ்.சி ,எஸ்.டி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ரூபாய் 700 நுழைவுத் தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதன்படி பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி முதல் ஆன்லைனில் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மே மாதம் 9 ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு

விவரங்களுக்கு தொடர்பு முகவரி :

FOR ADMINISTRATIVE MATTERS:

REGISTRAR,

NATIONAL INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH BHUBANESWAR

AT/PO: JATNI, KHURDA, ODISHA, INDIA

PIN: 752050

FOR UNDERGRADUATE ENTRANCE EXAMINATION (NEST) RELATED MATTERS:

CHIEF COORDINATOR - NEST,

NATIONAL INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH BHUBANESWAR

AT/PO: JATNI, KHURDA, ODISHA, INDIA

PIN: 752050

FOR ALL ACADEMIC MATTERS OTHER THAN NEST:

DEAN (ACADEMIC AFFAIRS),

NATIONAL INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH BHUBANESWAR

AT/PO: JATNI, KHURDA, ODISHA, INDIA

மேலும் விவரங்களுக்கு www.niser.ac.in என்னும் இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


Next Story