இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை: 127 காலி பணியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம். விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள்: 'சிறப்பு அதிகாரி' பிரிவில் சீனியர் மேனேஜர் 20, மேனேஜர் 107 என மொத்தம் 127 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி.,
வயது: 25 - 35 / 30- 40 (1.9.2025 ன் படி) அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா,பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 3.10.2025
முழு விவரங்களுக்கு: iob.in என்ற இணையதளத்தை பார்க்கவும்






