புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இன்போசிஸ் திட்டம்

இந்த நிதியாண்டுக்குள் புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதுமுள்ள பெருநகரங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. இந்தநிலையில் புதிய நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) நிதியறிக்கையை இன்போசிஸ் வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் நிகர லாபம் 8.7 சதவீதம் உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 921 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 7.5 சதவீதம் உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 279 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த நிதியாண்டுக்குள் புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story






